Skip to content

Inclusion

Tamil bilingual resources


 ஆரம்ப கால நிதி: பெற்றோர் / கவனிப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்

2 வயது குழந்தைகளுக்கான இலக்கு நிதியளிக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு

நீங்கள் ஏதேனும் ஒரு நன்மைக்கு தகுதி வாய்ந்தவர் என்றால், உங்கள் 2 வயது குழந்தை வாரத்திற்கு 15 மணிநேர நிதியுதவி கல்வி / குழந்தை பராமரிப்பைப் பெறலாம். தகுதியான குழந்தைகள் நிதிக்காலத்தின் தொடக்கமாக தங்கள் 2 வயது பிறந்தநாளிலிருந்து தொடர்ந்து  2 வயது நிதியை பயன் படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் விண்ணப்பிக்கிறீர்களோ, அதைப்பொறுத்து உங்கள் பிள்ளையின்  2 வயதுக்கான நிதிக்காலம் தொடங்கும்.

மேலும் 2 வயது குழந்தைகள் உள்ளூர் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டாலோ , கல்வி சுகாதாரம் மற்றும் பராமரிப்பு திட்டத்தை (EHC) கொண்டிருந்தாலோ ,  உடல் குறைபாட்டிற்கான வாழ்வாதாரத் தொகை பெறுபவராகவோ, பராமரிப்புக்காக தத்து கொடுக்கப்பட்டவராக இருந்தாலோ, சிறப்பு பாதுகாவலரிடம் இருந்தாலோ குழந்தைகள் நல பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டாலோ குழந்தைகளுக்கான நிதியை பெற்றுக் கொள்வார்கள்.

நீங்கள் நன்மைகளை கோர முடியாத

UK அல்லாத குடிமகனாக இருந்தால்

உங்கள் குடியுரிமை நிலை  ‘பொது நிதிக்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று இருந்தாலும், உங்கள் 2 வயது குழந்தைக்கு நிதியளிக்கப்பட்ட குழந்தை பராமரிப்பை நீங்கள் இன்னும் பெறலாம்.

இதற்கான விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் . Application for funded early education for two-year-olds from families with no recourse to public funds (NRPF) மேலும் துணை ஆவணங்களுடன். இதை உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் இணைக்கவும்.

நிதிஉதவிக்கு நீங்கள் தகுதி பட்டுள்ளீர்களா என்பதை இந்த இணைப்பில் devon.cc/tyf அல்லது தொலைபேசி மூலம்: 0345 155 1013 சரிபார்க்கலாம்.

உங்கள் குழந்தைக்கு பராமரிப்பு சேவை வழங்குபவரிடம் உரிமைக்கான ஆதாரத்தை நீங்கள் காட்ட வேண்டும்.

உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அல்லது போர்டல் செய்தியில் ‘TYF878’ என்று தொடங்கும் குறியீடு இருக்கும்

3 மற்றும் 4 வயது குழந்தைகளுக்கான உலகளாவிய நிதியளிக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு

3 மற்றும் 4 வயதுடைய அனைத்து குழந்தைகளும் வாரத்திற்கு 15 மணிநேர நிதியளிக்கப்பட்ட கல்வி மற்றும் குழந்தை பராமரிப்புக்கு உரிமை பெறுகிறார்கள்.

3 மற்றும் 4 வயது குழந்தைகளுக்கு நீட்டிக்கப்பட்ட உரிமை

3 மற்றும் 4 வயது குழந்தைகளுக்கான உலகளாவிய 15 மணிநேர நிதியளிக்கப்பட்ட கல்வி மற்றும் குழந்தை பராமரிப்புக்கு கூடுதலாக, வேலை செய்யும் பெற்றோரின் சில குழந்தைகளும் மேலும் 15 மணிநேரத்திற்கு தகுதி பெறலாம்.

தேசிய குறைந்தபட்ச ஊதியத்தில் வாரத்திற்கு 16 மணிநேரத்திற்கு சமமாக பெற்றோர்கள் வேலை செய்ய வேண்டும். கூட்டுக் குடும்பங்களில், பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டும் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இருப்பினும், சில சூழ்நிலைகள் உள்ளன, அதாவது, நீங்களோ அல்லது உங்கள் துணைவரோ மகப்பேறு விடுப்பு, தந்தைவழி விடுப்பு அல்லது தத்தெடுப்பு விடுப்பில் இருந்தால், அல்லது நீங்கள் ஊனமுற்றவர் அல்லது கவனிப்புப் பொறுப்புகளைக் கொண்டிருப்பதால், உங்களால் வேலை செய்ய முடியவில்லை, அங்கு நீங்கள் இன்னும் நிதியளிக்கப்பட்ட கல்வி மற்றும் குழந்தை பராமரிப்புக்கு தகுதியுடையவராக இருக்கலாம்.

குழந்தைகள் தங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது பிறந்தநாளைத் தொடர்ந்து நிதி காலத்தின் தொடக்கத்திலிருந்தே இந்த நிதியைப் பெற தகுதியுடையவர்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

குழந்தையின் பிறந்த நாள்:நிதியுதவி தொடங்க்கும் காலம்:
ஜனவரி 1 & 31 மார்ச்1 ஏப்ரல்
ஏப்ரல் 1 & ஆகஸ்ட் 311 செப்டம்பர்
1 செப்டம்பர் & 31 டிசம்பர்1 ஜனவரி

ஆரம்ப ஆண்டு கால நிதியுதவிக்கான விரிவாக்கம்

ஏப்ரல் 2024 முதல், 2 வயது குழந்தைகளின் தகுதிவாய்ந்த  பணிபுரியும் பெற்றோர்கள் 15 மணிநேரதிதிர்க்கான நிதியளிக்கப்பட்ட குழந்தை பராமரிப்பை பயன்படுத்திக்கொள்ள இயலும்.

செப்டம்பர் 2024 முதல், நிதியளிக்கப்பட்ட 15 மணிநேர குழந்தை பராமரிப்பு, தகுதிவாய்ந்த  9 மாத வயதிலிருக்கும் குழந்தைகளின் வேலை செய்யும் பெற்றோருக்கும் விரிவுபடுத்தப்படும்.

செப்டம்பர் 2025 முதல், 9 மாதங்கள் முதல் பள்ளி வயது வரையிலான குழந்தைகளின் தகுதி வாய்ந்த பணி செய்யும் பெற்றோர்கள் வாரத்திற்கு 30 மணிநேர குழந்தை பராமரிப்புக்கு தகுதியுடையவர்கள்.  

பிள்ளைகளின் பணி செய்யும் பெற்றோரில் தகுதிவாய்ந்த  நபர்களுக்கு  நிதியளிப்புக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே தக்க வயது வரை  நிதியை பெற இயலும்.

நீங்கள் தகுதி பெற்றவராக இருந்தால், உங்கள் தேசிய காப்பீட்டு எண்ணுடன் உங்கள் குழந்தை பராமரிப்பு வழங்குநருக்கு வழங்கப்பட வேண்டிய ஒரு குறியீடு உங்களுக்கு வழங்கப்படும், இதன் மூலம் நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை அவர்கள் சரிபார்க்க முடியும். உங்களுக்கான குறியீடு தொடர்ந்து தகுதியுடையதாக இருக்க ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை  உறுதிப்படுத்தப்பட வேண்டும். செல்லுபடியாகும் குறியீடு இல்லாமல் பணிசெய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கான உரிமையை பயன் படுத்த இயலாது.

ஆண்டின் 38 வாரங்களில் வாரத்திற்கு 15/30 மணிநேரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அனைத்து நிதியுதவிகளையும் அணுகலாம் அல்லது ஆண்டு முழுவதும் குழந்தை பராமரிப்பு தேவைப்பட்டால் ஆண்டின் பல வாரங்களில் சில  மணிநேரங்களைப் பயன்படுதிதிகொள்வதன் மூலம் நிதியைநீட்டிக்கமுடியும்.

நீங்கள் நிதியுதவியைப் பயன்படுத்த பல வழிகள் உள்ளன, எனவே நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள குழந்தை பராமரிப்பு வழங்குநரிடம் பேசுங்கள்.

உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற வகையான அடையாளச் சான்றுகளின் நகலை நீங்கள் காட்டி உங்கள் விவரங்களை உறுதிப்படுத்தும் பதிவு படிவத்தை பூர்த்தி செய்தால் உங்கள் குழந்தை பராமரிப்பாளர் உங்கள் சார்பாக ஆரம்ப ஆண்டு நிதியை கோருவார். 

வரி இல்லாத குழந்தை பராமரிப்பு

வேலைக்குச் செல்லும் பெற்றோர்களும் கல்வி/குழந்தை பராமரிப்புச் செலவுகளைச் செலுத்த உதவும் வரியில்லா குழந்தைப் பராமரிப்புக்குத் தகுதி பெறலாம்.  நீங்கள் தகுதி பெற்றிருந்தால், உங்கள் குழந்தைக்காக ஒரு ஆன்லைன் கணக்கை தொடங்க வேண்டும் அதன் மூலம் குழந்தை பராமரிப்பாளருக்கான பணத்தை நீங்கள் செலுத்தலாம். நீங்கள் கணக்கில் வைக்கும் ஒவ்வொரு £ 8 க்கும், அரசாங்கம் மற்றொரு £ 2 ஐ சேர்க்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் £500 வரை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம், அல்லது உங்கள் குழந்தைக்கு உடல் ஊனமுற்றவராக  இருந்தால் £1,000 வரை பெறலாம். இங்கே கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை தொடங்கலாம்.

இயலாமை அணுகல் நிதி

இயலாமை அணுகல் நிதி என்பது உடல் ஊனமுடைய அல்லது சிறப்புக் கல்வித் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு நிதி ஆதரவளிக்கும் ஆரம்ப ஆண்டு வழங்குநர்களுக்கானது. வழங்குநர்களுக்கு தங்கள் அமைப்புகளில் நியாயமான மாற்றங்களைச் செய்வதில் ஆதரவளிப்பதின் மூலம் ஆரம்ப கால இடங்களுக்கான செயல்பாடுக்கு இது உதவுகிறது.

உடல் ஊனத்துக்கான நிதி  மற்றும் ஒருசில அல்லது அனைத்து  இளம் வயதுக்கான உதவி பெறும் தகுதியான குழந்தைகளுக்கு இந்த நிதி கிடைக்கிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட வழங்குநர்களுடன் தொடர்பில் உள்ள  குழந்தைகளின் பெற்றோர்கள் முறைபடி ஆண்டுக்கு ஒரே ஒரு நிதி உதவியை மட்டும் பெற முடியும் என்பதை தெளிவாக அறிந்திருக்க வேண்டும், மேலும் நிதி உதவி  பெற வழங்குநருக்கான படிவத்தை கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

குழந்தை பராமரிப்பு செலவுகளுக்கு கிடைக்கக்கூடிய உதவி பற்றிய கூடுதல் தகவலுக்கு குழந்தை பராமரிப்பு தேர்வுகளைப் பார்வையிடவும்.

ஆதரவின் வரம்பைப் பற்றிய கூடுதல் தகவலை இங்கே காணலாம்:                     

Document resources

These files may not be suitable for users of assistive technology.