கோவிட்-19 (கொரோனாவைரஸ்) பரவுவதை எப்படி தடுப்பது? – பரிசோதனை மற்றும் ஆதரவு
கோவிட்-19 பரிசோதனை – எப்படி பதிவது?
உங்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால், கூடிய விரைவில் கோவிட்-19 (கொரோனாவைரஸ்) இருக்கிறதா என்பதை அறிய பரிசோதனை செய்ய வேண்டும்.
பரிசோதனை இலவசமானதும் சுலமானதும் ஆகும்.
gov.uk/get-coronavirus-test என்ற இனைய முகவரியில் பரிசோதனைக்கு வேண்டுகோள் சமர்ப்பிக்கலாம்
இனைய சேவையை பயன்படுத்துவதில் சிரமம் இருந்தால் (இங்கிலாந்திற்கு):
- 119 எண்ணை அழைக்கவும்
- மொழி பெயர்ப்பாளரை அணுக, 119 எண்ணை அழைத்து, 1 அழுத்தவும், பின் 2 அழுத்தவும்.
- காது கேளாதோர் (சைகை மொழி பயன்பாட்டாளர்கள்)interpreternow.co.uk/nhs119 என்ற இனைய முகவரியை பயன்படுத்தலாம்.
பின்வரும் முறைகளில் பரிசோதனை மேற்கொள்ளலாம்:
- உங்களுக்கு அருகில் உள்ள பரிசோதனை மையத்தில்
- பரிசோதனை மையத்தை அணுக இயலாவிடின், வீட்டுப் பரிசோதனை உபகரணம் மூலம் (இது கூடுதல் நேரம் எடுக்கும்)
சோதனைக்காக பதிவிடும்போது பரிசோதிக்கும் இடம் குறித்து கலந்தாலோசிக்கலாம்.
சோதனை மையத்தை அணுக பொது போக்குவரத்திலோ, அல்லது டாக்சியிலோ செல்லவே கூடாது. பிற இடங்களையும், பிறரையும் சென்று பார்க்க கூடாது.
பரிசோதனை மையத்தில் இருக்கும் பணியாட்கள் தொலைபேசி மற்றும் பிரிட்டன் சைகை மொழி காணொளி மொழிபெயர்ப்பாளரையும் அணுக முடியும்.
நோய் அறிகுறிகள் தென்பட்ட 8 நாட்களுக்குள் பரிசோதனை மய்யத்திலோ அல்லது 4 நாட்களுக்குள் வீட்டிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
பரிசோதையின்போது மூக்கின் உள்ளும், தொண்டையின் பின்பகுதியிலும் ஒரு பஞ்சு முனை பொருத்திய குச்சியால் துடைத்து எடுக்கப்படும்.
பரிசோதனை முடிவுகள் குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு அல்லது மின் அஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.
என்ஹெச்எஸ் பரிசோதனை மற்றும் தடமறிதல் சேவை மூலம் சேகரிக்கப்பட்ட உங்களின் பரிசோதனை பற்றிய விவரங்கள் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க ரகசியமாக வைக்கப்படுகின்றன, மற்றும் உங்களின் மற்றைய என்ஹெச்எஸ் மருத்துவ பதிவுடுகளில் இருந்தும் தனியாக வைக்கப்படும்.
உங்கள் குடியுரிமை நிலை என்னவாக இருப்பினும், இங்கிலாந்தில் கோவிட்-19 இலவச பரிசோதனை மற்றும் இலவச என். ஹெச். எஸ். சிகிச்சைக்கு உங்களுக்கு உரிமை உண்டு – குடியுரிமை பரிசோதனைகள் அவசியமில்லை.
நினைவில் கொள்ள:
- உங்களுக்குக் இருமல், உடல் வெப்பநிலை அதிகரித்தல் அல்லது சுவை, வாசனை உணர்ச்சிகளில் மாற்றம் அல்லது இழப்பு ஏற்பட்டால் உடனே பரிசோதனைக்கு பதிவிடவும்.
- நீங்கள் பரிசோதனை முடிவுகளை அறியும் வரையிலோ அல்லது உங்கள் பரிசோதனை பாசிட்டிவாக இருந்தாலோ (உங்களுக்கு கொரோனவைரஸ் உறுதி செய்யப்பட்டால்), நீங்கள் அவசியம் உங்களை தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு எங்கள் பிற பிரசுரங்களை பார்க்கவும்.
பரிசோதனை மற்றும் தடமறிதல் – நான் கோவிட்-19 இருக்கும் நபருடன் தொடர்பில் இருந்திருந்தால் என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டால், உங்கள் அறிகுறிகள் தென்பட தொடங்கும் 2 நாட்களுக்கு முன் வரை உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களை பற்றி விசாரிக்க என். ஹெச். எஸ். பரிசோதனை மற்றும் தடமறிதல் சேவை உங்களை தொடர்பு கொள்ளும்.
பரிசோதனை மற்றும் தடமறிதல் சேவை பின்வரும் முறைகளில் உங்களை தொடர்பு கொள்ளலாம்:
- 0300 013 5000 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து
- ‘NHStracing’ என்ற அனுப்புனர் முகவரியில் இருந்து குறுஞ்செய்தி
- உங்களால் முடிந்தால்contact-tracing.phe.gov.uk என்ற இனைய முகவரியில் உள்நுழையவும் கேட்டுக்கொள்ள படுவீர்கள்
அவர்கள் பின்வரும் விவரங்களை உங்களிடம் கேட்பர்:
- உங்கள் முழு பெயர், பிறந்த தேதி மற்றும் நீங்கள் வசிக்கும் இடத்தின் அஞ்சல் எண்
- உங்களுக்கு தென்பட்டுள்ள கோவிட்-19 அறிகுறிகள்
- நீங்ககள் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ள நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரி (இருந்தால்) மற்றும் இந்த நபர்களில் எவரேனும் 18 வயதுக்கு உட்பட்டவரா அல்லது இங்கிலாந்திற்கு வெளியில் வசிப்பவரா என கேட்கப்படும்.
- ‘நெருங்கிய தொடர்பு’ என்றால் என்ன என்பதையும் விளக்குவர்.
- உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்கப்படுவார்கள்.
- பரிசோதனை மற்றும் தடமறிதல் சேவை தகவல் கொடுத்தவர் யார் என்பதை வெளியிட மாட்டார்கள், உங்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
பின்வரும் விவரங்களை அவர்கள் உங்களிடம் கேட்கவே மாட்டார்கள்:
- வழக்கமான சந்தாவை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தொலைபேசி எங்களை அழைக்கும்படி கேட்க மாட்டார்கள் (உதாரணத்திற்கு, 09 அல்லது 087 எண்களில் தொடங்கும் தொலைபேசி எண்கள்)
- ஏதேனும் மென்பொருளை பதிவிறக்கவோ அல்லது உங்களில் கணினியின் கட்டுபாட்டை அளிக்கவோ கேட்க மாட்டார்கள்
- எதற்காவது கட்டணம் செலுத்தவோ அல்லது உங்கள் வங்கி கணக்கு , கிரெடிட் கார்டு விவரங்களையோ கேட்க மாட்டார்கள்
- உங்கள் கடவுச்சொற்கள், PIN நம்பர்கள் அல்லது உங்கள் சமூக வலைதள கணக்குகளின் அடையாளங்களை கேட்க மாட்டார்கள்.
- ukஅல்லது nhs.uk என்று இருக்கும் இணையதளங்களை தவிர வேறு இணையதளங்களை அணுகும்படி உங்களை கேட்க மாட்டார்கள்.
கோவிட்-19 இருக்கும் ஏதேனும் நபருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தாலும், பரிசோதனை மற்றும் தடமறிதல் சேவை உங்களை தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலமாக தொடர்பு கொள்வார்கள். நீங்கள் ஒரு கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்திருக்கிறீர்கள் என்றும் உங்களை 10 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்துவார்கள்.
அந்த 10 நாட்களின்போது, உங்களுக்கு நோய் அறிகுறிகள் உருவானால், நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள பதிவு செய்ய வேண்டும்.
உதவி மற்றும் ஆதரவு – நான் தனிமை படுத்திக்கொள்ளும்போது எனக்கு என்ன உதவிகள் கிடைக்கும்?
உங்களுக்கு கொரோனாவைரஸ் உறுதி செய்யப்பட்டாலோ அல்லது கொரோனவைரஸ் இருக்கும் ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததால் தனிமை படுத்திக்கொண்டிருந்தாலோ, உங்கள் பணியிடத்தில் உங்களால் வேலைக்கு வர இயலாது என்று தெரிவிக்கவும்.
www.111.nhs.uk/isolation-note என்ற இனைய முகவரியில் ‘தனிமைப்படுத்தல்-குறிப்புச்சீட்டு ‘ கிடைக்கும்
உங்கள் பணியிடத்தில் நோய்க்கால ஊதியம் பெற இயலாவிட்டால், தனிமை படுத்திக்கொள்ளும் முதல் நாளில் இருந்தே சட்டரீதியான நோய்க்கால ஊதியம் போன்ற அனுகூலங்களை பெற முடியலாம்.
சட்டரீதியான நோய்க்கால ஊதியம் பெற நீங்கள் தகுதி பெறவில்லையென்றால் (உதாரணத்திற்கு, நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால்) அரசாங்கத்தின் ஆதரவுத்தொகை அல்லது வேலைவாய்ப்பு மற்றும் ஆதரவு சலுகைதொகை இவற்றிற்கு உங்களுக்கு தகுதி இருக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு www.gov.uk/statutory-sick-pay/eligibility என்ற இனைய முகவரியில் பார்க்கவும் அல்லது தனிப்பட்ட அறிவுரை மற்றும் உதவிக்கு, குடிமக்களின் அறிவுரை நுகர்வோர் உதவி எண்ணை அழைக்கவும்: 0800 144 8848 அழைக்கவும் (காலை 9 முதல் மாலை 5 வரை, திங்கள் முதல் வெள்ளி வரை), 4 அழுத்தவும் (தொலைபேசி மொழிபெயர்ப்பு சேவை கிடைக்கும்).
உங்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் தேவைப்பட்டால், முடிந்தவரை இணையம் மூலமாக பெறவும் மற்றும் வாங்கிய பொருட்களை வீட்டு வாசல் அல்லது வீட்டின் வெளிப்புறத்தில் வைத்துவிடுமாறு கேட்டுக்கொள்ளவும்.
உங்களால் இணையத்தில் வாங்க முடியாவிட்டால், உணவு அல்லது மருந்துகள் பெற உதவி தேவைப்பட்டால், அல்லது பண உதவி தேவைப்பட்டால் உங்கள் அருகில் இருக்கும் சமூக அமைப்புகளால் உதவ முடியும்.
இந்த அமைப்புகள் என்னவென்று தெரியாவிட்டால் உங்கள் நகராட்சி, அருகில் உள்ள தேவாலயம் அல்லது நம்பிக்கைக்குழு இவர்களை அணுகலாம் அல்லது உங்கள் நண்பர் ஒருவரிடம் உதவி கேட்கலாம் (தொலைபேசி அல்லது மின் அஞ்சல் மூலமாக அணுகவும்)
உங்கள் உடல்நிலை நன்றாக இருந்தால், வீட்டில் சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்கவும் மற்றும் ஏதேனும் பணிகளில் உங்களை ஆக்கிரமித்துக்கொள்ளவும்.
கொரோனாவைரஸ் பரவலில் உதவி மற்றும் ஆதரவு – டெவனில் வசிப்பவர்களுக்கான தகவல்கள்
உங்களுக்கு உடல்நிலை சரியில்லை அல்லது கொரோனாவைரஸ் அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 111 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது 111.nhs.uk என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.
உங்களுக்கு உணவு, பணம் மற்றும் மருந்து அல்லது இதர உதவி அல்லது ஆலோசனை தேவையென்றால் www.devon.gov.uk/coronavirus-advice-in-devon/communities என்ற இணையதளத்தை பார்க்கவும்.
அல்லது கீழுள்ள மாவட்ட சமூக ஆதரவு உதவி எண்ணை அழைக்கவும்.
- East Devon: 01395 571500
- Exeter: 01392 265000
- Mid Devon: 01884 234387
- North Devon: 01271 388280
- South Hams: 01803 861297
- Teignbridge: 01626 215512
- Torridge: 01237 428700
- West Devon: 01822 813683
தங்களின் பிரச்னைகளை தீர்க்க மற்றும் நன்மைகளை பற்றி தேவையான இலவச, பாரபட்சமில்லாத மற்றும் ரகசிய ஆலோசனைகளுக்கு www.cabdevon.org.uk என்ற இணையதளத்தை பார்க்கவும், அல்லது குடிமக்களின் அறிவுரை நுகர்வோர் உதவி எண்ணை அழைக்கவும் 0800 144 8848 அழைக்கவும் (காலை 9 முதல் மாலை 5 வரை, திங்கள் முதல் வெள்ளி வரை), 4 அழுத்தவும்
நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் வேறு ஏதேனும் உதவி தேவையென்றால் டெவன் கொரோனாவைரஸ் அவசரகால உதவி எண்ணை அழைக்கவும். 0345 155 1011 (திங்கள் முதல் வெள்ளி காலை 8 முதல் மாலை 8 வரை, சனிக்கிழமை 9 முதல் மதியம் 1 மணி வரை).
ஆலோசகர் ஒருவரிடம் பேசும் வரை தொடர்பில் காத்திருக்கவும். ஆலோசகர்களால் மொழிபெயர்பாளர்களை தொடர்புகொள்ள முடியும்.
காது கேளாதவர்கள் இன்டர்ப்ரிட்டர்ஸ் லைவ் சேவையை www.devon.gov.uk/help/contact-us/british-sign-language என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
டெவனில் உள்ள சமூக மையங்களின் விவரங்களை பார்க்க devon.cc/communitygroups.