Skip to content

How to stop the spread of Covid-19 in Tamil


கோவிட்-19 (கொரோனாவைரஸ்) பரவுவதை தடுப்பது எப்படி

Language: TAMIL / தமிழ்

கோவிட்-19 என்றால் என்ன?

கோவிட்-19 ஒரு புதிய கொரோனா வைரஸ். இது சுலபமாக தோற்றும் நோயாகும்.

பெரும்பாலான மக்களுக்கு லேசான அறிகுறைகுள் அல்லது அறிகுறிகளே இல்லாமலும் இருக்கும், ஆனால் சிலருக்கு அதனால் நீண்ட கால நோய் அல்லது மரணம் கூட நிகழலாம்.

கோவிட்-19 ஆல் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் முதியவர்கள் (குறிப்பாக 70  வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் கொண்டவர்கள், நீடித்த நுரையீரல், சிறுநீரக, கல்லீரல் மற்றும் இதய நோயாளிகள், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், பார்க்கின்ஸன் போன்ற நரம்பியல் நோய் உடையவர்கள், சில விதமான மருந்துகள் உட்கொள்பவர்கள், மற்றும் கர்பிணிப்பெண்கள்.

பொதுவாக இல்லாவிடினும், சில சமயங்களில் இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் கூட மிகவும் பாதிக்கப்படலாம்.

இங்கு கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், நாங்கள் மார்ச் 2020-இல் செய்ததை போல் கடைகள் மற்றும் பள்ளிகளை மூட வேண்டி இருக்கும் மற்றும் மக்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கும்.

கோவிட்-19 பரவுவதை தடுக்க உங்களால் உதவ முடியும்!

‘சமூக இடைவெளி’ – ஏன் இது அவசியம்?

நல்ல சுகாதாரமும், சமூக இடைவெளியும் கோவிட்-19 பரவுவதை தடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

 • குறைந்தது 2 மீட்டர் இடைவெளி விடவும்.
 • என்ஹெச்எஸ் சுகாதார மையங்கள், கடைகள் மற்றும் பொது போக்குவரத்து போன்ற பொது இடங்களில் உட்புறங்களில் முகக்கவசம் அணியுங்கள் (நீங்கள் உண்ணும்போதும், பானங்கள் அருந்தும்போதும் முகக்கவசத்தை அகற்றிவிடலாம்).
 • உங்கள் கைகளை சோப்பு மற்றும் நீரால் தவறாமல் முழுமையாக 20 வினாடிகள் கழுவவும்.
 • சோப்பு மற்றும் நீர் கிடைக்காவிட்டால் ஹாண்ட் சானிடைசர் உபயோகிக்கவும்.
 • இருமினாலோ தும்மினாலோ அதை டிஸ்யூ பேப்பரில் பிடித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும். டிஸ்யூ பேப்பர் இல்லையென்றால், உங்கள் சட்டை கைத்துணியை உபயோகிக்கவும்.
 • உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயை தொடுவதை தவிர்க்கவும்.
 • முகக்கவசம் அணிந்திருக்கும்போது அதை தொடாதீர்கள்.
 • உங்கள் வீட்டில் வசிக்காத மக்களுடனான தொடர்பை குறைத்து கொள்ளுங்கள்.
 • கூட்டமான இடங்களை தவிருங்கள்.
 • முன்னமே திட்டமிட்டு, கூட்டம் அதிகமாக இருந்தால் வீட்டிற்கு திரும்பிவிட தயாராக இருங்கள்.
 • முடிந்தால் வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.

உங்களால் ஒரு ‘ஆதரவு வட்டம்’ உருவாக்க முடியும், உதாரணத்திற்கு, நீங்கள் தனியாக வசித்தாலோ அல்லது உங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள உதவி தேவைப்பட்டாலோ இன்னொரு வீட்டை சேர்ந்தவர்களின் உதவியை நாடலாம். உங்கள் ஆதரவு வட்டத்தில் இல்லாத வெளி நபர்களுடன் தொடர்பை குறைத்துக்கொள்ளவும்.

நீங்கள் எவ்வளவு பேரை சந்திக்கலாம் மற்றும் நீங்கள் எங்கெல்லாம் செல்லலாம் என்பன குறித்த விதிகள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் சமீபத்திய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

முகக்கவசம் – ஏன் அவசியம்?

உங்களுக்கு இருப்பது தெரிவதற்கு முன், கோவிட் 19 தோற்று பரவமுடியும். மற்றும் சிலருக்கு அறிகுறிகளே தெரியாது அல்லது மிக குறைவான அளவில் அறிகுறிகள் தெரிவதுண்டு.

நாம் சுவாசிக்கும் போதும், பேசும் போதும் சில நீர்துளிகளை வெளியேற்றுவதுண்டு. உங்களுக்கு கோவிட் 19 இருந்தால், இந்த நீர்துளிகளில் கிருமி இருக்கும்.

முகக்கவசம் நீர்துளிகளை பிடித்து உங்களிருந்து கோவிட் 19 பரவுவதை தடுக்கமுடியும்.

முகக்கவசத்தினால் உங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படுவதை தடுக்க முடியாது.

என்ஹெச்எஸ் சுகாதார மையங்கள், கடைகள் மற்றும் பொது போக்குவரத்து போன்ற பொது இடங்களில் உட்புறங்களில் முகக்கவசம் அணியுங்கள்.

நீங்கள் உண்ணும்போதும், பானங்கள் அருந்தும்போதும் முகக்கவசத்தை அகற்றிவிடலாம்.

சிலர் உடல்நலம் மற்றும் குறைபாடு காரணமாக முகக்கவசம் அணிய தேவையில்லை.

11 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை.

துணியால் செய்யப்பட்ட முகமூடி அல்லது ஸ்கார்ஃப், அல்லது மேல்ச்சட்டை கொண்டு நீங்களே முகமூடி செய்து உபயோகப்படுத்தலாம்.

இரண்டு பஞ்சு அடுக்குகள் மற்றும் காதின் பின்புறம் மாட்டிக்கொள்ளலாம் அல்லது தலையின் பின்புறம் கட்டிக்கொள்ளலாம்.

தங்களின் முகமூடி வாய் மற்றும் மூக்கை மூடும் வகையில் இருப்பது அவசியம், மேலும் விளிம்பில் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது.

நினைவிருக்கட்டும்:

 • முகக்கவசம்அணிந்திருக்கும் போது உங்களது முகமோ அல்லது கவசத்தையோ தொடாமல் இருங்கள்.
 • முகக்கவசம்ஈரமாக இருந்தால் அதை மாற்றிவிடுங்கள்
 • உபயோகித்த பின், முன்பக்கத்தை தொடாமல்முழுதாக முகக்கவசத்தை அகற்றவும்.
 • உபயோகித்த பின் பிளாஸ்ட்டிக் பையில்வைக்கவும்.
 • மீண்டும் உபயோகிக்கக்கூடிய முகமூடி தங்களிடம் இருந்தால், வீட்டிற்குசென்று சோப் தண்ணீர் கொண்டு கழுவவும்.
 • தங்களுடைய வேலைகளைபொறுத்து, உங்களிடம் இரண்டு முகக்கவசங்கள் இருக்கவேண்டும்.
 • கைகளைஅவ்வப்போது தொடர்ந்து கழுவுங்கள்.

மேலும் தெரிந்துகொள்ள

சுய தனிமை – கோவிட்-19 எனக்கு இருக்குமானால் என்ன செய்ய வேண்டும்?

தங்களுக்கு கீழுள்ள அறிகுறிகள் இருந்தால்:

 • புதிய தொடர் இருமல்
 • காய்ச்சல்
 • வாசம் மற்றும் சுவையில்மாற்றம் அல்லது இழப்பு

நீங்கள் வீட்டில் சுய தனிமை செய்துக்கொண்டு, கோவிட்-19 பரிசோதனைக்கு இணையத்தளம் மூலம் www.gov.uk/get-coronavirus-test அல்லது என்ற 119 எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் சமயத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.

சுய தனிமை என்றால்:

 • நீங்கள் பள்ளி, வேலை அல்லது பொது இடங்களுக்கு செல்லக்கூடாது.
 • நீங்கள் பொது போக்குவரத்தோ அல்லது டாக்சியிலோ பயணம் செய்யக்கூடாது.
 • மருந்து அல்லது உணவு வாங்க வெளியே செல்லக்கூடாது.
 • வீட்டிற்குவிருந்தினர்கள் வரக்கூடாது. நீங்களும் உடற்பயிற்சி மற்றும் அடுத்தவர்களை சந்திக்க வெளியே செல்லக்கூடாது.

பரிசோதனையின் முடிவில் தங்களுக்கு தோற்று உள்ளது என்ற முடிவு வந்தால் 10 நாட்கள் வரை சுய தனிமை செய்துக்கொள்ள வேண்டும். இது 7 நாள் என்ற வீதியிலிருந்து உயர்ந்துள்ளது.

தங்களுக்கு அறிகுறிகள் தெரிந்த உடன், உங்கள் வீட்டில் இருப்பவர்களும் 10 நாட்கள் வரை சுய தனிமை செய்துக்கொள்ள வேண்டும்.

பரிசோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு வந்தால், நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களும் சுய தனிமை செய்துகொள்வதை நிறுத்திவிடலாம்.

10 நாட்களுக்கு பின் தங்களுக்கு இருமல் அல்லது சுவை வாசம் மாற்றம் தவிர மற்ற அறிகுறிகள் இருந்தால், உடல் சரியாகும் வரை தனிமைப்படுத்திக்கொள்ளவும்.

தொடர் இருமல் அல்லது சுவை வாசம் மாற்றம் இருந்தால் நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை. இந்த அறிகுறிகள் மறைய சற்று தாமதம் ஆகும்.

உங்களோடு தனிமையில் இருக்கும் போது, உங்கள் வீட்டின் நபருக்கு அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனையில் தொற்று இருப்பது தெரிந்தால், அவர்கள் மேலும் 10 நாட்கள் வரை தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்.

கோவிட்- 19 ஆல் தனிமைப்படுத்திக்கொள்ளும் போது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக:

 • முடிந்தால், தனி தனி அறையில்இருக்க வேண்டும்.
 • சுத்தமான காற்றிற்காக ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கவும்.
 • முடிந்தால், குளியலறை மற்றும் சமையலறை போன்ற பகிர்ந்துக்கொள்ளும் இடங்களைதவிர்க்கவும்.
 • குளியலறை அல்லது சமையலறையை பகிர்ந்துகொள்ள வேண்டுமானால், வெவ்வேறு சமயத்தில் உபயோகிக்கவும். ஒவ்வொரு முறை உபயோகித்த பின் நன்றாக இடத்தை சுத்தம்செய்யவும்.கால அட்டை வைத்துக்கொள்வது இங்கு நல்லது.
 • துண்டு, துணி மற்றும் இதர பொருட்களைபகிர வேண்டாம்.
 • கைகளைஅவ்வப்போது தொடர்ந்து கழுவுங்கள்

தங்களுக்கு உடல்நிலை பாதித்து மருத்துவ ஆலோசனை தேவையென்றால்:

 • 111 என்ற எண்ணைஅழைக்கவும் அல்லது nhs.uk என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.
 • சைகைமொழி உபயோகிப்பவர்கள் interpreternow.co.uk/nhs111என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.
 • அவசரதேவைக்கு 999 என்ற எண்ணை அழைக்கவும். அல்லது தங்களுக்கு காது கேட்கும் குறைபாடு இருந்தால், emergencysms.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.
 • தாங்கள் சுற்றுலாவிற்காக பயணித்துள்ளீர்கள் என்றால், மேலும் தகவல்களுக்கு சுற்றுலாவிதிமுறைகளை பார்க்கவும் மற்றும் தங்குமிடத்தை அணுகவும். சுற்றுலா விதிமுறைகள் cc/covid19-tourism என்ற எங்களது இணையத்தளத்தில் பார்க்கலாம்.

Top